ஐயோ பாவம்.. பரிதாப நிலையில் கீர்த்தி சுரேஷ்..'அந்த' வீடியோவை பார்த்து உருகிப்போன ரசிகர்கள்.!
#CoupleGoals: புல்லட் பைக்கை நூதன முறையில் திருடிய காதல் ஜோடி.. சி.சி.டி.வி காட்சிகள்..!
சேலம் நகரில் உள்ள சாந்தி தியேட்டர் பகுதியில், பழைய இருசக்கர வாகனங்கள் வாங்கி விற்பனை செய்யும் கடை உள்ளது. இந்த கடையை ராம் பாலாஜி என்பவர் நடத்தி வருகிறார். கடந்த வெள்ளிக்கிழமை கடைக்கு வந்த இளம் ஜோடி, புல்லட் வாங்க வேண்டும் என்று கூறி வாகனத்தை பார்வையிட்டுள்ளனர்.
ரூ.1.75 இலட்சம் மதிப்புள்ள இருசக்கர வாகனத்தை தேர்வு செய்த காதல் ஜோடி, வாகனத்தை இயக்கி பார்க்க வேண்டும் என்று கூறி அங்கிருந்து புறப்பட்டு சென்றுள்ளது. கடையில் பணியில் இருந்த ஊழியரும், காதல் ஜோடியுடன் மற்றொரு ஜோடியும் வந்துள்ளதை கண்டு நம்பி வாகனத்துடன் அனுப்பி வைத்துள்ளனர்.
ஆனால், ஜோடியாக சென்றவர்கள் மீண்டும் கடைக்கு திரும்பி வராத நிலையில், உடன் வந்த மற்றொரு ஜோடியிடம் அவர்களுக்கு தொடர்பு கொள்ளுங்கள் என்று கடை ஊழியர்கள் கூறியுள்ளனர். ஆனால், அவர்கள் அந்த பெண்ணை மட்டும் தான் எங்களுக்கு தெரியும், அவரின் நம்பர் கூட எங்களிடம் கிடையாது என்று தெரிவித்துள்ளனர்.
சேலத்தில் புல்லட்டை ஓட்டிப்பார்ப்பதாக கூறி எஸ்கேப் ஆன காதல் ஜோடி.#Salem #abpnadu #ABPnews pic.twitter.com/ig8JSnXlzd
— Kelikaimanidhan (@Sathishsv1906) January 23, 2022
இதனால் அதிர்ச்சியடைந்த கடை ஊழியர்கள் உரிமையாளருக்கு தகவல் தெரிவிக்கவே, கடைக்கு வந்த உரிமையாளர் சி.சி.டி.வி ஆதாரத்துடன் சிக்கிய ஜோடியை சேலம் நகர காவல் நிலையத்தில் ஒப்படைத்து புகார் அளித்துள்ளார். புகாரை ஏற்று விசாரணை நடத்திய அதிகாரிகள், வாகனத்தை எடுத்து சென்ற காதல் ஜோடியில் பெண்ணின் உறவினர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
அவர்களிடம் நடந்த விசாரணையில், வாகனத்தை எடுத்து சென்ற வாலிபர் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள குப்பம் பகுதியை சேர்ந்த பிரவீன் குமார் என்பது தெரியவந்துள்ளது. காதல் ஜோடிக்கு தற்போது காவல் துறையினர் வலைவீசியுள்ள நிலையில், ஜோடியாக வந்து இருசக்கர வாகனத்தை திருடி சென்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுதான் கப்புள் கோல் போல..