மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
6 வயது சிறுவன் அஸ்திவார குழியில் தேங்கிய நீரில் மூழ்கி பரிதாப பலி.. விளையாடச்சென்ற குழந்தை பிணமாக வீடுதிரும்பிய சோகம்.!
சேலம் மாவட்டத்தில் உள்ள ஊமாரெட்டியூர், சுந்தராம்பாளையம் காலனியில் வசித்து வருபவர் முருகன் @ குருசாமி. இவரின் குழந்தைகள் புஷ்பராஜ் (வயது 13), அபினேஷ் (வயது 6), ஹர்த்திகா (வயது 3). அபினேஷ் அங்குள்ள பள்ளியில் ஒன்றாம் வகுப்பு பயின்று வருகிறார்.
நேற்று பள்ளிக்கு சென்றுவிட்டு வீட்டிற்கு வந்த அபினேஷ், விளையாடச்சென்று இரவு 8 மணி ஆகியும் வரவில்லை. இதனால் அவனின் பெற்றோர் மகனை தேடியலைந்த நிலையில், வீட்டருகே நடைபெற்று வரும் கட்டுமான பணியிடத்தில் தேடியுள்ளனர். அப்போது, அஸ்திவாரம் எழுப்ப அமைக்கப்பட்ட குழியில் இருந்த நீரில் சிறுவன் மூழ்கி உயிரந்துள்ளான்.
மகன் நீரில் மூழ்கி பேச்சுமூச்சின்றி இருப்பதாக நினைத்த பெற்றோர், அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு அபினேஷை அழைத்து சென்றனர். அங்கு அவனை பரிசோதனை செய்த மருத்துவர்கள் சிறுவனின் இறப்பை உறுதி செய்தனர். அங்கிருந்த சி.சி.டி.வி கேமிரா மூலமாக சிறுவன் மாலை 5 மணியளவிலேயே குழிக்குள் தவறி விழுந்தது தெரியவந்தது. இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.