மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
குடும்ப பிரச்சனையால் விபரீதம்: சாணிப்பவுடர் குடித்து 2 மாணவிகள் தற்கொலை முயற்சி.. பள்ளியில் பகீர்.!
சேலம் மாவட்டத்தில் உள்ள வாழப்பாடி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பயின்று வரும் 2 மாணவிகள், சாணிப்பவுடரினை நீரில் கலந்து குடித்து தற்கொலை முயற்சி செய்துள்ளனர்.
இதனால் உடலில் விஷம் பரவி இருவரும் வாந்தி எடுக்கவே, இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த மாணவிகள் ஆசிரியர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இந்த தகவலை அறிந்த ஆசிரியர்கள், இருவரையும் சேலம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அழைத்து சென்றனர்.
அங்கு மாணவிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், தகவல் அறிந்து சென்ற காவல் துறையினர் இருவரிடமும் தற்கொலை முயற்சிக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தியுள்ளனர். முதற்கட்ட விசாரணையில், இருவரும் குடும்ப பிரச்சனை காரணமாக தற்கொலைக்கு முயன்றது தெரியவந்தது.