இலஞ்ச ஒழிப்புத்துறைக்கே லஞ்சமா?.. சேலத்தில் மோட்டார் வாகன ஆய்வாளர் அதிரடி கைது.!



Salem West Transport Vehicle Inspector Arrested by Bribery Eructation Inspector  

தான் கையூட்டு ஏறுவது மட்டுமல்லாது, அதனை தட்டிக்கேட்க வேண்டிய அதிகரிக்கும் கட்டிங் கொடுக்க முயற்சித்த மோட்டார் வாகன ஆய்வாளர் கைது செய்யப்பட்டார்.

சேலம் மேற்கு வட்டார போக்குவரத்து அலுவலக மோட்டார் வாகன ஆய்வாளர் சதாசிவம். இவருக்கு தனது அலுவலகத்தில் இலஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை செய்யலாம் என்ற எண்ணம் எழுந்துள்ளது. 

பேச்சுவார்த்தை

இதனால் இலஞ்ச ஒழிப்புத்துறை ஆய்வாளர் ரவிக்குமாரை தொடர்பு கொண்ட சதாசிவம், அலுவலகத்தில் சோதனை நடத்தாமல் இருக்கவும், சோதனை நடத்தினால் முன்கூட்டியே தகவல் தெரிவிக்கவும் பேச்சுவார்த்தை நடத்தி இருக்கிறார். 

இதையும் படிங்க: நண்பர்கள் எதிரிகளானதால் பயங்கரம்; சிறுவர்கள் பிரச்சனை கொலையில் முடிந்தது.. வயிற்றை கிழித்துக் கொன்ற தோழன்.!

Salem

விபூதி அடித்த இலஞ்ச ஒழிப்புத்துறை

இதனையடுத்து, சதாசிவத்தை கையும் களவுமாக கைது செய்ய முடிவெடுத்த ரவிக்குமார், அவரிடம் பேசி ஓட்டல் ஒன்றுக்கு வரவழைத்துள்ளார். அங்கு தனது துறை அதிகாரிகளை முன்கூட்டியே மாறுவேடத்தில் வரவழைத்தார். 

அதிரடி கைது

இலஞ்சம் கொடுக்கும் ஆவலுடன் வந்து இருந்த சதாசிவத்தை, ரூ.1 இலட்சம் பணத்துடன் கொத்தாக தூங்கிய அதிகாரிகள் அவரிடம் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர். இலஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகளிடமே இலஞ்சம் கொடுத்து நடவடிக்கை எடுக்காமல் இருக்க முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: லாரிக்கு மேலே கட்டிவைத்து அழைத்துச் செல்லப்பட்ட நாய்; பதறவைக்கும் வீடியோ.!