கட்சி துவங்கியது முதல், எங்கே சென்றாலும் அதை செய்யும் விஜய்.! ஆச்சரியத்தில் தொண்டர்கள்.!
நாளை முதல் ஊரகப் பகுதியில் சலூன் கடைகள் திறப்பு: முதல்வர் எடப்பாடி
சீனாவில் உஹான் மாகாணத்தில் தொடங்கிய கொரோனோ வைரஸின் கோரத்தாண்டவம் இன்று பல நாடுகளிலும் பரவி மக்களை அச்சத்தில் ஆழ்த்தி வருகிறது. இந்நிலையில் தற்போது இந்தியாவிலும் இதன் தாக்கம் அதிகரித்து கொண்டே வருவதால் மக்களை காப்பாற்ற மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மக்களுக்கு ஏற்ப்படுத்தி வருகின்றனர்.
அதன்படி தமிழகத்தில் நான்காம் கட்டமாக இந்த மாதம் இறுதி வரை ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆனால் சில நிபந்தனைகளுடன் கடைகளை திறக்க ஏற்கனவே தமிழக அரசு அனுமதி வழங்கியது. அதன்படி தற்போது நகராட்சி, பேரூராட்சி, மாநகராட்சி போன்ற பகுதிகளை தவிர ஊரகப்பகுதிகளில் மட்டும் நாளை முதல் சலூன் கடைகள் திறக்கலாம் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் இன்று அறிவித்துள்ளார்.
அதே சமயம் சலூன் கடைகளில் மக்கள் சமூக இடைவெளியை பின்பற்றுமாறும், முடி வெட்டுப்பவர் கண்டிப்பாக கையுறையை அணிந்திருக்க வேண்டும், முககவசம் அணிந்திருக்க வேண்டும், அதுமட்டுமின்றி சலூன் கடைகளில் ஒரு நாளைக்கு 5 முறை சிறுமி நாசினி தெளிக்கப்பட வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளார்.