மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அரசியலுக்கு வர தயார்.! ஆனால் இந்த கட்சியில்தான் சேருவேன்.! சந்தானம் அளித்த பகீர் பேட்டி.!
நடிகர் சந்தானம் அரசியலுக்கு வர தயார் என்று பேட்டி அளித்திருப்பது ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சந்தானம் நடிப்பில், ஜான்சன் இயக்கத்தில் தற்போது உருவாகி இருக்கும் படம் பாரிஸ் ஜெயராஜ். இந்த திரைப்படம் பிப்ரவரி 12-ம் தேதி தமிழகமெங்கும் பிரம்மாண்டமாக வெளியாகவுள்ளது. இந்தப் படத்தின் டிரைலர், கானா பாடல்கள் என இணையத்தில் ட்ரெண்ட்டிங்கில் இருப்பதால் படக்குழுவினர் உற்சாகத்தில் உள்ளனர்.
நேற்று செய்தியாளர்களை சந்தித்த சந்தானத்திடம் அரசியலுக்கு வருவீர்களா என்று கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு பதிலளித்த சந்தானம் ராஜ்ய சபா எம்பி பதவி கொடுத்தால் எந்த கட்சியிலும் இணைய தயார் என்று பதில் கூறினார்.
மேலும் சசிகலா அழைத்தால் செல்வீர்களா என்று கேட்டதற்கு நிச்சயமாக யார் சீட்டு கொடுத்தாலும் செல்ல தயார் என தெரிவித்துள்ளார். நடிகர் சந்தானம் இதற்க்கு முன்னர் அரசியலில் ஈடுபடும் எண்ணம் இல்லை என கூறிவந்த நிலையில் தற்போது அவர் நகைச்சுவையாக கூறியுள்ளார் எனவும் பேசப்படுகிறது.