சென்னையில் குத்தகைக்கு வீடு வாங்க நினைக்கிறீங்களா?. புதிய வகை மோசடி.. அலெர்ட் மக்களே.!



Scam on House Agreement in chennai and Outer Chennai  

 

சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதியில் வீடு குத்தகைக்கு வாங்க நினைக்கும் நபர்களை குறிவைத்து, புதிய வகையிலான மோசடி என்பது நடைபெற்று வருவதாக ரியல் எஸ்டேட் தொழில் புரிந்துவருவோர் எச்சரித்து இருக்கின்றனர். குறிப்பாக அடுக்குமாடி வீடு வாங்குவோர், வீட்டை வாடகைக்கு விடும் நிலையில், சிலர் குத்தகைக்கு கொடுக்கும் வழக்கத்தை வைத்துள்ளனர். 

நபரொருவர் ரூ.5 இலட்சம் பணத்தை கொடுத்து, நான்கு ஆண்டுகள் குத்தகை அடிப்படையில் வீட்டை பெறுகிறார் எனில், நான்கு ஆண்டுகள் முடிந்ததும் குத்தகை தொகையை பெற்றுக்கொண்டு அவர் அங்கிருந்து வெளியேறுவார். அல்லது குத்தகையை மீண்டும் புதுப்பித்து மீண்டும் அதே வீட்டில் இருப்பார். 

இதையும் படிங்க: ரூ.25 இலட்சத்தை ஏமாற்றிவிட்டு ஓட்டம்பிடித்த மகளிர் மன்ற குழுத் தலைவி.. 30 பேர் கண்ணீருடன் புகார்.!

வீடு குத்தகைக்கு விடுவதில் புதிய மோசடி

இவ்வாறாக மொத்தமாக பணத்தை கொடுத்துவிட்டு குத்தகைக்கு வீடு தேடும் நபர்களை குறிவைத்து புதிய மோசடிகள் நடந்து இருக்கின்றன. அதாவது, முறைகேடான ஆவணங்களை கொடுத்து வங்கிகளில் ரூ.60 இலட்சம் கடன் பெறும் நபர்கள், அதனை குத்தகைக்கு ரூ.5 இலட்சம் பணம் வாங்கி விடுகின்றனர். பின் வங்கிகளில் கடனை செலுத்தாமல் தலைமறைவாகுவதால், வங்கி அதிகாரிகள் வீட்டை காயப்படுத்தி எலாம் விடுகின்றனர்.

இதனால் அங்கு குத்தகைக்கு பணம் கொடுத்து குடியிருப்போர் வெளியேற்றப்படுகிறார்கள். அவர்களின் பணமும் ஏமாற்றப்படுகிறது. மூத்த குடிமக்கள் இவ்வாறான விஷயங்களில் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் காவல்துறையிடம் புகார் அளிக்க இயலாமலும் அவதிப்பட்டுள்ளனர். இதனால் குத்தகைக்கு வீடுகள் வாங்குவோர் கவனத்துடன் செயல்படவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: அடமானம் வைத்த நகைகளின் அளவு குறைந்ததால் அதிர்ச்சி; இந்தியன் வங்கி பணியாளர்கள் மீது புகார்.!