மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ஆகஸ்ட் மாதத்திற்கு பின்னர் பள்ளி, கல்லூரிகள் மீண்டும் திறக்கப்படும்..! மத்திய அரசு தகவல்..!
நாடும் முழுவதும் மீண்டும் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படுவது குறித்து மத்திய அமைச்சர் ரமேஷ் போக்ரியால் தெரிவித்துள்ளார்.
சீனாவின் உஹான் நகரில் இருந்து பரவ தொடங்கிய கொரோனா காரணமாக பெரும்பாலான நாடுகளில் முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்தியாவிலும் ஐந்து கட்டங்களாக அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு இந்த மாதத்துடன் முடிவு வருகிறது.
இதனிடையே ஊரடங்கு, கொரோனா அச்சம் காரணமாக அனைத்து விதமான தொழில்களும் முடக்கப்பட்டுள்ளது. குறிப்பாக பள்ளி, கல்லூரிகள் அனைத்தும் கடந்த சில மாதங்களாக மூடப்பட்டுள்ளது. இதனால் பொது தேர்வு எழுதும் மாணவர்களும் தேர்வு எழுத்தமுடியாமல் சிரமப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில் மத்திய அரசு ஒவொரு முறை தளர்வுகளை அறிவிக்கும்போதும் பள்ளி, கல்லூரிகள் திறப்பு குறித்து மாணவர்களும், பெற்றோரும் கவனித்துவருகின்றனர். இந்நிலையில் மீண்டும் பள்ளி, கல்லூரிகள் திருப்பது குறித்து பேசிய மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் போக்ரியால் கூறுகையில்,
நாடு முழுவதும் பள்ளி மற்றும் கல்லூரிகள் வரும் ஆகஸ்ட் மாதத்திற்கு மேல் திறக்கப்படும் எனவும், பள்ளி, கல்லூரிகள் திறப்பது எப்போது என்பதை தெரிந்துகொள்ள 33 கோடி மாணவர்கள் காத்திருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.