3 நாட்களில் ரூ.127.64 கோடி.. கங்குவா திரைப்படத்தின் நிலவரம்.!
முத்துராமலிங்க தேவரின் வாழ்க்கை வரலாறு பள்ளி பாடத்தில் இடம்பெறும்; உயர் நீதிமன்றம் உத்தரவு.!
முத்துராமலிங்க தேவரின் வாழ்க்கை வரலாறு வரும் கல்வியாண்டில் பள்ளி பாடப்புத்தகத்தில் இடம்பெறும் என்று உயர்நீதிமன்றத்தின் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
வங்கத்தின் நேதாஜி சுபாஷ் சந்திர போஸை அரசியல் குருவாக கொண்டு தென்னகத்தை ஆட்சி செய்தவர் முத்துராமலிங்க தேவர். தான் தேர்தலில் போட்டியிட்ட ஐந்து முறையும் வெற்றி பெற்று எம்எல்ஏவாக பதவி வகித்தார்.
அந்த அளவுக்கு மக்கள் மத்தியில் செல்வாக்குடன் விளங்கினார். தம்முடைய சொத்துக்களை 17 பாகங்களாக பிரித்து அதில் ஒரு பாகத்தை மட்டும் தனக்காக வைத்துக்கொண்டு மீதி 16 பாகத்தை ஏழை விவசாயிகளுக்கு பங்கிட்டுக் கொடுத்தார்.
திருவிக வால் 'தேசியம் காத்த செம்மல்' என்று போற்றப்பட்டார். வடக்கில் திலகருக்கும் தெற்கில் முத்துராமலிங்கத் தேவருக்கும் அக்காலத்தில் ஆட்சி செய்த ஆங்கிலேயே அரசு வாய்ப்பூட்டுச் சட்டம் போட்டது.
கடந்த கல்வியாண்டில் அவருடைய வாழ்க்கை வரலாறு பள்ளி பாடப்புத்தகத்தில் இடம் பெற்றிருந்தது. ஆனால் மாற்றியமைக்கப்பட்ட சமச்சீர் பாடப்புத்தகத்தில் அவருடைய வாழ்க்கை வரலாறு நீக்கப்பட்டது.
இத்தனை பெருமைக்கும் சிறப்புக்கும் உரிய முத்துராமலிங்க தேவரின் வாழ்க்கை வரலாறு வருங்கால சந்ததியினருக்கு தெரியாமல் போகும் எனவே அவருடைய வாழ்க்கை வரலாறு மீண்டும் பள்ளி பாடப்புத்தகத்தில் இடம்பெற வேண்டும். என்று மதுரையைச் சேர்ந்த சங்கிலி என்பவர் மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
நீதிபதிகள் சசிதரன், ஆதிகேசவலு ஆகியோர் முன்பு இதன் மீதான மனு விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு சார்பாக பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், 2019-2020ம் கல்வியாண்டில் ஏழாம் வகுப்பு பாடத்தில் முத்துராமலிங்க தேவரின் வாழ்க்கை வரலாறு இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது.
தமிழக அரசின் வாக்குறுதியை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், வழக்கை முடித்து வைப்பதாக உத்தரவிட்டனர். முன்னதாக, பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் வாழ்க்கை வரலாற்று பாடம் கடந்தாண்டு திடீரென பள்ளி பாடங்களிலிருந்து நீக்கப்பட்டது. இதுதொடர்பாக தமிழக அரசு எந்தவித பதிலும் தெரிவிக்காத நிலையில், உயர்நீதிமன்ற மதுரைக் கிளை இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.