திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
சமூகவலைதளங்களில் வெளியான +2 தேர்வு வினாத்தாள்! நாளை பள்ளிகளுக்கு தேர்வு நடைபெறுமா?
நாளை பள்ளிகளில் நடைபெற இருந்த அரையாண்டு பிளஸ்-2 வேதியியல் வினாத்தாள் வலைத்தளங்களில் வெளியாகியுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகம் முழுவதும் ஒரே வினாத்தாளில் பள்ளிகளுக்கு அரையாண்டுத் தேர்வு நடைபெற்று வருகிறது. கிட்டத்தட்ட அணைத்து தேர்வுகளும் முடிவுற்ற நிலையில் நாளை பிளஸ் 2 மாணவர்களுக்கு வேதியியல் தேர்வு நடைபெற இருந்தது.
இந்நிலையில், அந்த தேர்வின் வினாத்தாள்கள் வாட்ஸப் உள்ளிட்ட சமூகவலைதளங்களில் வெளியாகி உள்ளது. இந்த விவகாரம் கல்வித்துறை அதிகாரிகள் மற்றும் பெற்றோர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், நாளை தேர்வு நடைபெற இருந்த தேர்விற்கு புதிய வினாத்தாள் தயாரிப்பதா அல்லது தேர்வை ரத்து செய்வதா என்ற கோணத்தில் கல்வித்துறை அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.