திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
பள்ளி மாணவியை கர்ப்பமாக்கிய 12ம் வகுப்பு மாணவன் கைது.!
செங்கல்பட்டு மாவட்டம் பாலூர் அருகே உள்ள பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமி செங்கல்பட்டில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் பனிரெண்டாம் வகுப்பு படித்து வந்துள்ளார். அதேபோல் காஞ்சிபுரம் மாவட்டம் வடக்குபட்டு கிராமத்தை சேர்ந்த மாணவன் மாத்தூர் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வந்துள்ளான்.
இந்த நிலையில் இவர்கள் இருவரும் காதலித்து வந்துள்ளனர். இந்த நிலையில் இவர்கள் இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்துக் கொண்டு உல்லாசமாக இருந்துள்ளனர். இதனால் மாணவி கர்ப்பமாகியுள்ளார்.
இதனையடுத்து சிறுமியின் நடவடிக்கையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. இதனால் சந்தேகம் அடைந்த பெற்றோர் சிறுமியை செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று பரிசோதித்தனார். அங்கு பரிசோதனை செய்ததில் சிறுமி கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது.
இதனைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த சிறுமியின் பெற்றோர் கருவை கலைக்க சொல்லி மருத்துவரிடம் கூறியுள்ளனர். இதனையடுத்து உடனடியாக மருத்துவர் செங்கல்பட்டு அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளார்.இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மகளிர் போலீசார் மாணவன் மீது போகோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.