திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
பள்ளி மாணவி தூக்கிட்டு தற்கொலை.. போலீஸ் விசாரணை.!
மேலப்பாளையம் வசந்தாபுரம் தெற்கு தெருவில் கோவிந்தராஜன் தனது குடும்பத்தினரோடு வசித்து வந்துள்ளார். இவரது மகள் ஶ்ரீநிதி அதே பகுதியிலுள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு படித்து வந்துள்ளார்.
இந்நிலையில் அரையாண்டு விடுமுறை முடிந்து பள்ளிக்கு செல்லவிருந்த ஸ்ரீநிதி திடீரென்று அவரது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்ய முயற்சி செய்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த ஶ்ரீநிதியின் பெற்றோர் உடனடியாக சிறுமியை மீட்டு பாளையங்கோட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.
அங்கு மருத்துவர்கள் ஶ்ரீநிதிக்கு முதலுதவி செய்து பின் மேல் சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில் அங்கு தீவிர சிகிச்சை பெற்று வந்த ஶ்ரீநிதி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து இந்த சம்பவம் குறித்து மேலப்பாளையம் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.