#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
தற்கொலை செய்து கொண்ட திருவள்ளூர் பள்ளி மாணவியின் பிரேத பரிசோதனை துவங்கியது.!
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் 12 ஆம் வகுப்பு மாணவி ஸ்ரீமதி உயிரிழந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்த சோகம் மக்கள் மனதில் இருந்து நீங்குவதற்குள் நேற்று திருவள்ளூர் அருகே பள்ளி விடுதியில் 12 ஆம் வகுப்பு மாணவி தற்கொலை செய்துகொண்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருவள்ளூர் அருகே மப்பேடு அடுத்த கீழசேரியில் 'சேக்ரட் ஹார்ட்' பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் திருத்தணியை அடுத்த சூரியநகரம் தெக்கனூர் காலனியை சேர்ந்த சரளா என்ற மாணவி விடுதியில் தங்கி 12 ஆம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில் நேற்று விடுதி அறையில் இருந்த மின்விசிறியில் மாணவி சரளா துப்பட்டாவால் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்தார்.
அவர் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இந்தநிலையில், மாணவியின் இறப்புக்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அதுவரை உடலை வாங்க மாட்டோம் என்றும் மாணவியின் உறவினர்கள் தெரிவித்தனர். இதனையடுத்து மாணவியின் உடல் பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. நேற்று இரவு நேரமானதால் பிரேத பரிசோதனை இன்று துவங்கும் என தெரிவிக்கப்பட்டது.
மாணவியின் பிரேத பரிசோதனை திருவள்ளூர் அரசு தலைமை மருத்துவமனையில் தொடங்கியது. மாணவி தற்கொலை வழக்கை சிபிசிஐடி விசாரித்து வரும் நிலையில், மாணவியின் பபிரேத பரிசோதனை மாணவியின் அண்ணன் சரவணன் முன்னிலையில் சற்றுமுன் துவங்கியது.