#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
காதலனுக்கு விலை உயர்ந்த கிப்ட் வாங்கி தர மூதாட்டியிடம் கொள்ளையடிக்க முயன்ற பள்ளி மாணவி...
கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டம் பூவாற்றுப்புழா பகுதியைச் சேர்ந்தவர் ஜலஜா(60). இவர் அவரது வீட்டில் தனிமையில் இருந்துள்ளார். அப்போது 17 வயது பள்ளி மாணவி ஒருவர் திடீரென மூதாட்டியின் வீட்டிற்குள் வந்து மூதாட்டி கழுத்தில் அணிந்திருந்த நகைகளை கேட்டுள்ளார். அதற்கு ஜலஜா மறுப்பு தெரிவித்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த சிறுமி மூதாட்டியின் கண்ணில் மிளகாய் பொடியை தூவியுள்ளார். அதில் மூதாட்டி வலி தாங்க முடியாமல் அலறி துடிக்கவே அந்த நேரம் பார்த்து சுத்தியலால் மூதாட்டியின் முதுகு மற்றும் தலை பகுதியில் ஓங்கி அடித்து விட்டு கழுத்தில் இருந்த செயின் மற்றும் மோதிரத்தை கழற்றி சென்றுள்ளார்.
இரத்த வெள்ளத்தில் கிடந்த மூதாட்டியை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இச்சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கவே போலீசார் மேற்கொண்ட தீவிர விசாரணையில் பள்ளி மாணவியை கைது செய்து விசாரணை நடத்தியுள்ளனர். முதலில் தவற்றை ஒப்பு கொள்ளாத சிறுமி பின்னர் காதலனுக்கு செல்போன் வாங்கி தருவதற்காக திருடியதாக ஒப்பு கொண்டுள்ளார். அதனையடுத்து போலீசார் சிறுமியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.