மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
12ஆம் வகுப்பு தனியார் பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பள்ளியின் தாளாளர்.! மாணவர்களின் போராட்டத்தால் கம்பி என்னும் தாளாளர்.!
சென்னை ஆவடி அருகே திருநின்றவூரில் செயல்பட்டு வரும் ஏஞ்சல் மெட்ரிகுலேசன் பள்ளியில் படிக்கும் 12ம் வகுப்பு மாணவிக்கு பள்ளியின் தாளாளர் வினோத் பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த பெற்றோர் திருநின்றவூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். ஆனால் இது தொடர்பாக எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த பெற்றோர்கள் மற்றும் 100க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ மாணவிகள் பள்ளியை முற்றுகையிட்டு நேற்று முன்தினம் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து பள்ளி தாளாளர் வினோத் மீது 4 பிரிவுகளின் கீழ் திருநின்றவூர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதையடுத்து போராட்டத்தை கைவிட்டு மாணவ-மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் என அனைவரும் கலைந்து சென்றனர்.
இந்தநிலையில், போலீசார் பள்ளி தாளாளர் வினோத் மீது போக்சோ சட்டத்தின் கீழ் 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக இருந்த அவரை தனிப்படை போலீசார் தேடி வந்தனர்.
இந்த நிலையில், பாலியல் தொல்லை புகாரில் தலைமறைவாக இருந்த வினோத்தை தனிப்படை போலீசார் கோவாவில் இன்று காலை கைது செய்தனர். கைதான பள்ளி தாளாளர் வினோத்துக்கு 15 நாள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.