திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
கல்லூரி மாணவியை கத்தியால் குத்திய பள்ளி சிறுவன்.. அட இதுக்காகவா?
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள பரதேசிபட்டி கிராமத்தை சேர்ந்தவர் மனோகரன். இவர் அதே பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார். இவரது மகள் மோனிஷா ஊத்தங்கரையில் உள்ள தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இந்த நிலையில் நேற்று வழக்கம்போல் கல்லூரிக்கு சென்று மாலை வீடு திரும்பியுள்ளார்.
இந்த நிலையில் இரவு 8 மணியளவில் மோனிஷா வீட்டில் புகுந்த சிறுவன் ஒருவன், மோனிஷாவை சரமாரியாக கத்தியால் குத்தியுள்ளார். இதனை தடுக்க வந்த மோனிஷாவின் பாட்டியையும் சிறுவன் தாக்கி விட்டு தப்பித்து சென்றுள்ளார்.
இதில், மோனிஷாவின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக மோனிஷாவை மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து போலீசார் சிறுவனை பிடித்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த விசாரணையில் சிறுவன் மோனிஷாவின் தம்பி உறவு முறை கொண்ட ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவன் என்பது தெரியவந்தது. இவன் மோனிஷாவின் வீட்டிற்கு அடிக்கடி வந்து செல்வது பழக்கம். இந்த நிலையில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு மோனிஷாவின் வீட்டுக்கு வந்த சிறுவன் வீட்டில் இருந்த செல்போனை திருட முயற்சித்தது போது மோனிஷா அதனை பார்த்து கண்டித்து அனுப்பியுள்ளார்.
மேலும் இது குறித்து சிறுவனின் பெற்றோரிடமும் கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சிறுவன் மோனிஷாவை பழிவாங்க கத்தியால் குத்தியுள்ளார். இதனையடுத்து போலீசார் சிறுவனிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.