பள்ளி மாணவர்களுக்கிடையே மோதல்.! பரிதாபமாக உயிரிழந்த மாணவன்.! கொந்தளித்த உறவினர்கள்..!என்ன காரணம்.?



school student died

திருச்சி மாவட்டத்தில் அரசு பள்ளி வளாகத்தில், சக மாணவர்கள் தாக்கியதில் மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியிகல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், உயிரிழந்த மாணவரின் உறவினர்கள் பள்ளி முன்பாக மறியலில் ஈடுபட்டுள்ளனர்.

திருச்சி மாவட்டம் தொட்டியம் பாலசமுத்திரத்தில் அரசு மேல்நிலைப்பள்ளியில், தோளூர்பட்டி கிராமத்தை சேர்ந்த மவுலீஸ்வரன் என்ற 15 வயது மாணவன் 10-ம் வகுப்பு படித்து வந்துள்ளார். நேற்று காலையில் இவர் வழக்கம் போல் பள்ளிக்கு சென்றுள்ளார், இந்தநிலையில், நேற்று மதியம் 10-ம் வகுப்பு மாணவ-மாணவிகள் பள்ளி வளாகத்தில் அமர்ந்து படித்து கொண்டிந்தனர். அப்போது, மாணவர்கள் சிலர் சிறு, சிறு கற்களை தூக்கிப்போட்டு விளையாடி கொண்டிருந்தனர். அப்போது, ஏற்பட்ட தகராறில் மவுலீஸ்வரனை தகாத வார்த்தைகளால் திட்டியதாக கூறப்படுகிறது. 

அப்போது அவர்களிடையே ஏற்பட்ட வாக்குவாதத்தில் 3 மாணவர்கள் சேர்ந்து மவுலீஸ்வரனை தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால் பாதிக்கப்பட்ட மாணவன் மவுலீஸ்வரன் அருகே இருந்த நிலை தடுமாறி கீழே விழுந்துள்ளார். இதனையடுத்து சக மாணவர்கள் அலறல் சத்தம் போட்டுள்ளனர். மாணவர்களின் அலறல் சத்தத்தை கேட்டு விரைந்து வந்த ஆசிரியர்கள் உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

ஆனால் அங்கு மவுலீஸ்வரனை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து தகவலறிந்த மவுலீஸ்வரனின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் பள்ளி வளாகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். மாணவனின் மரணத்திற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி கோஷமிட்டனர். பின்னர் பள்ளி முன்புள்ள சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனைத்தொடர்ந்து சம்பந்தப்பட்ட 3 மாணவர்களை தனியாக அழைத்து போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். இந்நிலையில், மாணவன் மவுலீஸ்வரன் கொலையில் தொடர்புடைய 3 மாணவர்களை போலீசார் இன்று கைது செய்தனர். கைது செய்யப்பட்ட 3 ம் மாணவர்களிடபோலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.