மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
மாணவர்கள் கண்முன்னே பள்ளிஆசிரியைக்கு நேர்ந்த பயங்கரம்.! நடுநடுங்கவைத்து அரங்கேறிய கொடூரம்!!
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகேயுள்ள சித்தனேந்தல் என்ற கிராமத்தில் வசித்து வருபவர் ரதிதேவி. இவர் திருமங்கலத்தில் உள்ள தனியார் உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
ரதிதேவிக்கு கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு குருமுனிஸ்வரன் என்பவருடன் திருமணம் நடைபெற்றுள்ளது மேலும் அவர்களுக்கு ஹர்ஷவர்ஷினி, ஹர்ஷ்வர்ஷன் என இரட்டை குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் குருமுனீஸ்வரன் வேலைக்கு செல்லாததால் கணவன் மனைவி இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
இந்நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக, ரதிதேவி கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு கணவரை பிரிந்து தனது குழந்தைகளுடன், பெற்றோர் வீட்டில் வசித்து வருகிறார். இந்நிலையில் கடந்த மாதம் ரதிதேவியின் வீட்டிற்கு வந்த குருமுனீஸ்வரன் இருவரும் சேர்ந்து வாழ அழைப்பு விடுத்துள்ளார். ஆனால் அதற்கு ரதிதேவி மறுப்பு தெரிவித்துள்ளார்.
இதனால் கடுமையான ஆத்திரத்தில் இருந்த குருமுனீஸ்வரன் நேற்று மதிய வேளைக்கு பிறகு ரதிதேவி பணிபுரியும் பள்ளிக்கு சென்றுள்ளார். அங்கு மூன்றாவது மாடியில் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு பாடம் எடுத்து கொண்டிருந்த ரதிதேவியை சந்தித்து பெரும்வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
பின்னர் தனது கைகளில் வைத்திருந்த ஹெல்மெட்டால் அவரது தலையில் கடுமையாகத் தாக்கி, மாணவர்கள் முன்பே கத்தியை எடுத்து ரவிதேவியை சரமாரியாக குத்தியுள்ளார்.
பின்னர் அங்கிருந்து வேகமாக வெளியேறி சென்றுள்ளார். இந்நிலையில் மற்ற பள்ளி ஆசிரியைகள் அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முயற்சி செய்தநிலையில் ரதிதேவி பரிதாபமாக உயிரிழந்தார்.
இதனைத் தொடர்ந்து போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்ட நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் இது குறித்து வழக்கு பதிவு செய்து குருஈஸ்வரனை கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.