திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
தமிழகத்தில் பிப்ரவரியில் பள்ளிகளுக்கு மீ்ண்டும் விடுமுறை.? என்ன காரணம் தெரியுமா.?
கடந்த 2009ஆம் ஆண்டு இறுதியில் உலகம் முழுவதும் பரவத் துவங்கிய கொரோனா வைரஸ் தற்போது வரை ஆட்டிப்படைத்து வருகிறது. மேலும் தற்போதும் இந்தியாவில் கொரோனா பரவல் முற்றிலும் குறைந்தபாடில்லை. இந்நிலையில் கொரோனோ அச்சுறுதல் காரணமாக 2020 மார்ச் மாதம் இந்தியாவில் பள்ளி-கல்லூரிகள் மூடப்பட்டன.
அதனைத் தொடர்ந்து தற்போது கொரோனா பரவல் ஓரளவுக்கு கட்டுக்குள் வந்தநிலையில் மீண்டும் பள்ளி-கல்லூரிகள் திறக்கப்பட்டன . இந்தநிலையில் வருகிற பிப்ரவரி மாதம் 1ஆம் தேதி முதல் 1ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் பள்ளிகளை திறக்க அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியானது.
இந்த நிலையில், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகின்ற பிப்ரவரி 19 ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலின் முடிவுகள் பிப்ரவரி 22 ஆம் தேதி வெளியாகிறது. இவற்றை கருத்தில் கொண்டு பிப்ரவரி 18 முதல் 22 ஆம் தேதி வரை தொடர்ந்து ஐந்த நாட்கள் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க பள்ளிக் கல்வித் துறை முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.