திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
முதல்வர் நிவாரண நிதிக்கு தொகையை அள்ளிக்கொடுத்த சீமான், பாரதிராஜா.! தொகை எவ்வளவு தெரியுமா.?
நாடு முழுவதும் தற்போது கொரோனா பரவல் இரண்டாவது அலையாக அதிதீவிரமாக பரவி வருகிறது. நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையால் மருத்துவமனையில் நோயாளிகள் நிரம்பி வழிகின்றனர். இதனையொட்டி, தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் பொதுமக்களும் தொழில் நிறுவனங்களும் நிதி வழங்க வேண்டுகோள் விடுத்திருந்தார்.
இந்தநிலையில், கொரோனா வைரசுக்கு எதிராக தமிழக அரசு எடுத்துவரும் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளுக்கு ஆதரவு கொடுக்கும் வகையில் பலரும் நிதி உதவி செய்து வருகின்றனர். அந்த வகையில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் இயக்குநர் பாரதிராஜா ஆகிய இருவரும் நிதி உதவி வழங்கியுள்ளனர்.
இன்று 04-06-2021, தலைமைச்செயலகத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களை நேரில் சந்தித்து, கொரோனா துயர்துடைப்பு பணிகளுக்காக, நாம் தமிழர் கட்சி சார்பாக, 5 இலட்சம் ரூபாயை முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு வழங்கினேன்.
— சீமான் (@SeemanOfficial) June 4, 2021
(1/3)#Donate2TNCMPRF @CMOTamilnadu @mkstalin pic.twitter.com/SFWq4K2Pts
நேற்று தலைமைச் செயலகத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுடன் சென்று முதல்வர் மு.க ஸ்டாலினை சந்தித்த இயக்குநர் பாரதிராஜா 5 லட்சம் நிதியுதவி வழங்கினார். அவருடன், சென்ற நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானும் 5 லட்சம் நிதியுதவி அளித்துள்ளார். முதல்வரிடம் எழுவர் விடுதலையை வலியுறுத்தியபோது விரைவில் நிறைவேறும் என்று உறுதியளித்ததாக சீமான் அவரது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.