திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
#Breaking: எதிர்காலத்தை கணித்து கூறிய முத்துராமலிங்கத்தேவர் - நினைவுகூர்ந்த சீமான்., பரபரப்பு பேட்டி.!
மக்களின் இன்றைய வாழ்க்கைமுறையை அன்றே கணித்து கூறியவர் முத்துராமலிங்கத்தேவர் என்று சீமான் பேசினார்.
சென்னையில் உள்ள நந்தனத்தில் இருக்கும் பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய சீமான், அங்கிருந்த திருவுருவ சிலைக்கு மலர்தூவி மரியாதை செய்தார். அதனைத்தொடர்ந்து, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அவர் கூறுகையில், "மக்கள் எதிர்காலத்தில் குடிநீரை பாட்டிலில் வாங்கி குடிப்பார்கள், விளை நிலங்களை அழித்து கூடுகளை வீடுகளாக அமைத்து தனித்தனியே வாழுவார்கள் என்று எதிர்காலத்தை கணித்து கூறியவர் முத்துராமலிங்கத்தேவர்.
ஜாதி மதமின்றி அனைவரும் சமமானவர்கள் என்ற தெய்வீக கருத்தை போற்றி உரக்க கூறியவர். அவரின் ஜெயந்தியை அவர் வழி நடக்க நாம் உறுதியேற்போம். என்று அவரின் புகழை போற்றுவோம்" என்று தெரிவித்தார்.