இளைஞர்களின் எதிர்காலத்தை நினைத்து ரத்தக்கண்ணீர் வருகிறது - செல்லூர் ராஜு பேட்டி.!



Sellur K Raju request to TN Govt 

 

தமிழ்நாட்டில் போதை ஒழிப்பு விவகாரத்தில் அரசு தீவிரமாக செயல்பட வேண்டும் என செல்லூர் ராஜு கோரிக்கை வைத்தார்.

மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு, "மத்திய & மாநில அரசின் கையாலாகாத்தனம் காரணமாக போதை நடமாட்டம் தமிழ்நாடு மற்றும் இந்தியாவில் கடுமையாக அதிகரித்துவிட்டது. சித்திரை திருவிழாவில் நான் இளைஞர்கள், இளம் தலைமுறை போதைக்கு அடிமையாகி தன்னை அறியாமல் கோஷம்போட்டு செல்லும்போது எனக்கு வருத்தமாக இருந்தது. 

அரபுநாடுகளில் கொடுக்கப்படும் தண்டனை கஞ்சா போன்ற போதை வஸ்துக்களை கடத்தும் நபர்களுக்கு வழங்க வேண்டும். மாநில அரசும், மத்திய அரசும் ஒன்றுசேர்ந்து செயல்பட்டு புதிய சட்டத்தை இயற்ற வேண்டும். போதைப்பொருள் தடுப்பு விவகாரத்தில் அரசுகள் தீவிரமாக செயல்பட வேண்டும். 

இவ்வாறான இளைஞர்களின் செயல்களை பார்த்து எனக்கு இரத்த கண்ணீர் வருகிறது. மதுரை மாநகரில் 7 ஆயிரம் காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டாலும், சித்திரை திருவிழாவில் கொலை நடந்துள்ளது. இளம் வயதில் போதைக்கு அடிமையாகி, என்ன செய்கிறோம் என்பது தெரியாமல் திரிகின்றனர். பெற்றோர் அவரை கண்காணிக்க வேண்டும்.

கனிமொழி எனது அண்ணன் மு.க ஸ்டாலின் ஆட்சிக்கு வந்தால் ஒருசொட்டு மது தமிழ்நாட்டில் இருக்காது என கூறினார். அவர் ஆட்சிக்கு வந்து 3 ஆண்டு ஆகிவிட்டது. இனியாவது அதனை ஒழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்" என தெரிவித்தார்.