கடல்போல் காட்சியளிக்கும் செம்பரம்பாக்கம் ஏரியின் தற்போதைய நிலை.!



semparampakkam lake water level

தமிழகம் முழுவதும் கடந்த சில தினங்களாக வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது. குறிப்பாக சென்னை, காஞ்சீபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கடந்த 3 நாட்களாக மழை வெளுத்து வாங்கியது. இதன் காரணமாக பல ஏரிகள் வேகமாக நிரம்பி வருகின்றன. 

தற்போது கனமழையின் காரணமாக செம்பரம்பாக்கம் ஏரியில் நீர்வரத்து காரணமாக அதிக அளவு நீர் நிறைந்து கடல் போல் காணப்படுகிறது. நேற்றைய நிலவரப்படி செம்பரம்பாக்கம் ஏரிக்கு 480 கன அடி நீர்வரத்து வந்தது. ஏரியின் நீர்மட்டம் உயரம் 21.17 அடியாகவும், மொத்த கொள்ளளவு 2,898 மில்லியன் கன அடியாகவும் இருந்தது.

semparampakkam

இந்த நிலையில் இன்று காலை நிலவரப்படி செம்பரம்பாக்கம் ஏரியின் நீர் மட்டம் 21.27 அடியாக  உயர்ந்துள்ளது. 2015ஆம் ஆண்டு சென்னையை உருக்குலைத்த பெருவெள்ளம் போல் வந்துவிடுமோ என்ற அச்சத்தில் மக்கள் இருந்தனர். இந்தநிலையில் தற்போதைக்கு மக்கள் தேவையில்லாமல் அச்சம் கொள்ளத்தேவையில்லை இந்த மழை எந்தவித சேதத்தையும் ஏற்படுத்தாது என தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் கொடுத்த தகவல் மக்களை ஆறுதல் படுத்தியது.