ஐயோ பாவம்.. பரிதாப நிலையில் கீர்த்தி சுரேஷ்..'அந்த' வீடியோவை பார்த்து உருகிப்போன ரசிகர்கள்.!
சென்னையில் மீண்டும் பலத்த மழை.! மீண்டும் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து உபரி நீர் திறப்பு.!
வங்கக்கடலில் உருவான நிவர் புயல் கடந்த வாரம் புதுச்சேரி - மாமல்லபுரம் இடையே கரையை கடந்தது. நிவர் புயலின் காரணமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த வாரம் இரண்டு நாட்களில் தொடர்ந்து கனமழை பெய்தது. இதன் காரணமாக செம்பரம்பாக்கம், பூண்டி உள்ளிட்ட ஏரிகளின் நீர்வரத்து அதிகரித்தது. 24 அடி உயரம் கொண்ட ஏரியில் 22 அடிக்கு மேல் தண்ணீர் இருப்பு அதிகரித்ததால் ஏரியின் பாதுகாப்பு கருதி கடந்த 25-ந்தேதி செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து உபரிநீர் திறந்து விடப்பட்டது.
6 நாட்களாக திறந்துவிடப்பட்ட உபரிநீர், கடந்த 30-ந்தேதி முற்றிலும் நிறுத்தப்பட்டது. இந்த நிலையில் மீண்டும் உருவான ‘புரெவி’ புயல் காரணமாக நேற்று முன்தினம் இரவு முதல் திருவள்ளூர், காஞ்சீபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்தது. இதன் காரணமாக செம்பரம்பாக்கம் ஏரிக்கு மீண்டும் நீர் வரத்து அதிகரித்தது. செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர் வரத்து தொடர்ந்து வந்து கொண்டிருப்பதாலும், மேலும் பலத்த மழை பெய்யக்கூடும் என்பதாலும் செம்பரம்பாக்கம் ஏரியின் நீர் மட்டத்தை 22 அடியிலேயே வைத்துக்கொள்ள பொதுப்பணித்துறை அதிகாரிகள் முடிவு செய்தனர்.
இந்தநிலையில், முதல் கட்டமாக நேற்று மதியம் 12 மணியளவில் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து மீண்டும் 2-வது முறையாக 5 கண் மதகு வழியாக 500 கனஅடி நீர் திறந்து விடப்பட்டது. இந்நிலையில், திருவள்ளூர், காஞ்சீபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் செம்பரம்பாக்கம் ஏரிக்கு மீண்டும் நீர் வரத்து அதிகரித்ததுள்ளது.