மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் உண்டா? இல்லையா? அமைச்சர் அதிரடி!
தமிழகத்தில் 8 ஆம் வகுப்பு மாணவர்கள் பொதுத்தேர்வு எழுத இருப்பதால், 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மாலைநேரத்தில் 1 மணி நேரம் சிறப்பு வகுப்பு நடத்த வேண்டும். அதேபோல் தினமும் தேர்வுகள் நடத்த வேண்டும் என சுற்றறிக்கை வந்ததால் மாணவர்கள் அதிர்ச்சியில் இருந்தனர்.
இந்தநிலையில், தொடக்கக் கல்வி இயக்குநரகம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மாலை வேளைகளில் சிறப்பு வகுப்புகள் எதுவுமில்லை இல்லை என விளக்கம் அளித்துள்ளது.
இந்தநிலையில் ஈரோடு மாவட்டம் அரசு பள்ளி மாணவ மாணவிகளுக்கு அரசின் விலையில்லா மதிவண்டிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் பள்ளிகல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கலந்து கொண்டு மாணவர்களுக்கு மிதிவண்டிகளை வழங்கினார்.
இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அவர், 8ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளி நேரத்திலேயே சிறப்பு வகுப்பு எடுக்க பரிசீலனை செய்யப்படுவதாக கூறினார்.