மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அட நீங்களே இப்படி ராகிங் பண்ணலாமா..? ஜூனியர் மாணவர்களை அரை நிர்வாணமாக்கிய சீனியர் மருத்துவ கல்லூரி மாணவர்கள்..!
வேலூர் பாகாயத்தில் சிஎம்சி மருத்துவக் கல்லூரி இயங்கி வருகிறது. இங்குள்ள மாணவர்கள் விடுதியில் தங்கி உள்ள ஜூனியர் மாணவர்களை கடந்த சில மாதங்களாகவே சீனியர் மாணவர்கள் சிலர் அரை நிர்வாணமாக கல்லூரி வளாகத்தை சுற்றிவருமாறு ராகிங் செய்துள்ளனர்.
இது மட்டுமல்லாமல் பாலியல் ரீதியாக நடித்துக் காட்டச் சொல்லியும் சீனியர் மாணவர்கள் துன்புறுத்தியதாக சொல்லப்படுகிறது. மேலும் இதுகுறித்து கல்லூரி நிர்வாகத்தின் கவனத்திற்கு வந்துள்ளது. எனவே இது குறித்து விசாரணை நடத்த சிஎம்சி தரப்பில் 2 குழுவை அமைத்துள்ளது.
மேலும் சிஎம்சி மருத்துவக் கல்லூரியில் அரை நிர்வாணத்தில் மாணவர்களை ஓட விட்டு ரேகிங் செய்த 7 சீனியர் மாணவர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். இது குறித்து விளக்கம் அளித்த சிஎம்சி மருத்துவமனை இயக்குனர் டாக்டர் விக்ரம் மேத்யூஸ் எங்கள் கல்லூரியில் ராகிங்கை எந்த விதத்திலும் ஏற்க மாட்டோம் என்றும் இது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது என்றும் கூறினார். அதன் அடிப்படையில் கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.