திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
நெல்லையில் பரபரப்பு.. லஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. கையும் களவுமாக மடக்கிய லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள்.!!
நெல்லை கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலகத்தில் உதவி செயற்பொறியாளராக நாகர்கோவிலை சேர்ந்த கவுதமன் பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் கவுதமன் அரசு வளர்ச்சித் திட்டங்களுக்கு விண்ணப்பிக்கும் ஒப்பந்ததாரர்களிடம் லஞ்சம் வாங்குவதாக புகார்கள் தொடர்ந்து வந்துள்ளது.
அதன் அடிப்படையில் நெல்லை லஞ்ச ஒழிப்பு போலீசார் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலகத்திற்கு திடீரென்று சென்று சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இந்த அதிரடி சோதனையில் அந்த அலுவலகத்தில் இருந்து கணக்கில் வராத ரூ.95 ஆயிரத்து 800 பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் சில முக்கிய ஆவணங்களும் அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டது.
இதனையடுத்து உதவி செயற்பொறியாளர் கவுதமன் தங்கியிருந்த விடுதியிலும் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தியுள்ளனர். இதில் கணக்கில் வராத ரூ. 60,000 பணத்தை லஞ்ச ஒழிப்பு போலீசார் பறிமுதல் செய்தனர்.
இதனை தொடர்ந்து மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலகத்தில் பணியாற்றும் கவுதமன் உள்பட 3 பேர் மீது 2 பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.