அடேங்கப்பா.. நடிகர் மாதவன் வாங்கியுள்ள காஸ்ட்லி சொகுசு படகு.! விலையை கேட்டு வாயை பிளந்த ரசிகர்கள்!!
பள்ளி மாணவியை பெற்றோர் உதவியுடன் கடத்திச் சென்று கற்பழிப்பு.! வாடிக்கையாக பெண்களை ஏமாற்றி வந்த வாலிபர் தலைமறைவு.!
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கீரிப்பாறை பகுதிக்கு அருகில் உள்ள கிராமத்தில் வசித்து வந்த 12 ஆம் வகுப்பு படிக்கும் மாணவியை பெற்றோரின் உதவியுடன் பலாத்காரம் செய்துள்ளார் பிரகாஷ் என்ற 23 வயது வாலிபர். பள்ளி விடுமுறையின் போது அந்த மாணவி கீரிப்பாறைக்கு அருகில் உள்ள தனது பாட்டி வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது அந்தப் பகுதியில் வசிக்கும் பிரகாஷ் என்பவர் உடன் அவருக்கு பழக்கம் ஏற்பட்டது.
அந்தப் பெண்ணின் செல்ஃபோன் எண் மற்றும் இன்ஸ்டாகிராம் ஐடியை பிரகாஷ் பெற்றுள்ளார். நாளடைவில் இருவருக்குள்ளும் காதல் மலர்ந்தது. பின்னர் இருவரும் பல இடங்களுக்கு பைக்கில் சுற்றி வந்தது தெரியவந்துள்ளது.
கடந்த பிப்ரவரி 19ஆம் தேதி பள்ளிக்கு சென்ற அந்த மாணவி வீடு திரும்பவில்லை. பூதப்பாண்டி பகுதியிலுள்ள காவல் நிலையத்தில் இது குறித்து அந்த மாணவியின் பெற்றோர் புகார் அளித்தனர். விசாரணையில் பிரகாஷ் அந்த பெண்ணை பெற்றோரின் உதவியுடன் திருப்பூருக்கு சென்றது தெரியவந்தது.
பின்னர் அந்த பெண்ணை பிரகாஷ் பலமுறை பாலியல் ரீதியாக துன்புறுத்தியுள்ளார். இந்த வழக்கு நாகர்கோவில் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டது. பின்னர் பிரகாஷின் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதனை அறிந்த பிரகாஷின் பெற்றோர் நேற்று முன் தினம், அந்த மாணவியை அழைத்து வந்து அவரின் வீட்டின் முன்பு விட்டுச் சென்றனர். பிரகாஷ் தற்போது தலைமறைவாக இருக்கிறார்.
ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு ராதாபுரம் பகுதியைச் சேர்ந்த திருமணமான இளம் பெண் ஒருவருடன் பிரகாஷ் பழகி வந்துள்ளார். அந்தப் பெண்ணை குழந்தையுடன் அழைத்து சென்று குடும்பம் நடத்தியுள்ளார். அவரின் கொடுமை தாங்காமல் அந்தப் பெண் தற்கொலை செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. பிரகாஷ் இப்படி பெண்களை கடத்தி சென்று குடும்பம் நடத்தி, அவர்களை சித்திரவதை செய்வதை வாடிக்கையாக கொண்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.