திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
ஓடும் பேருந்தில் இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை.. 2 இளைஞர்கள் கைது.!
நாகப்பட்டினம் வெளிப்பாளையம் பகுதியைச் சேர்ந்த 30 வயதுடைய பெண் ஒருவர் தனியார் சொகுசு பேருந்தில் சென்னையிலிருந்து கன்னியாகுமரிக்கு சென்று கொண்டிருந்தாா்.
அதே பேருந்தில் திருநெல்வேலி மாவட்டம், சிந்துபூந்துறை, ஜங்ஷன் பகுதியை சேர்ந்த முகமது யாசா் (20) மற்றும் தங்கமாரியப்பன் (21) பயணித்துள்ளனர். இந்நிலையில் பேருந்து சென்னை - திருச்சி நெடுஞ்சாலையில் விழுப்புரத்தை அடுத்த பிடாகம் அருகே சென்று கொண்டிருந்தது.
அப்போது பேருந்தில் பயணம் செய்து கொண்டிருந்த பெண்ணிற்கு யாசா் மற்றும் தங்கமாரியப்பன் பாலியல் தொல்லை கொடுத்துள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண் பேருந்து ஓட்டுனரிடம் அந்த இளைஞர்களால் ஏற்படும் அசவுகரியத்தை பற்றி தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து ஓட்டுநரின் உதவியோடு அந்த பெண் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். இந்த புகாரின் அடிப்படையில் விழுப்புரம் தாலுகா போலீஸாா் இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனை தொடர்ந்து பாலியல் தொந்தரவு கொடுத்த இரண்டு இளைஞர்களும் மது போதையில் இருந்ததாக சொல்லப்படுகிறது.
மேலும் ஓடும் பேருந்தில் பெண்ணிற்கு இளைஞர்கள் பாலியல் தொந்தரவு கொடுத்த சம்பவம் பயணிகளின் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.