மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
குடிகார தந்தையால் 4 வயது சிறுமிக்கு ஏற்பட்ட விபரீதம்: 11 ஆம் வகுப்பு மாணவனின் பதறவைக்கும் செயல்..! தமிழகமே அதிர்ச்சி..!
காஞ்சிபுரம் அருகே குடி போதையில் இருந்த தந்தை தனது நான்கு வயது மகளை பூங்காவில் விளையாட விட்டுவிட்டு தூங்கியதால் நேர்ந்த பாலியல் வன்கொடுமையால் சிறுமி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
காஞ்சிபுரம் மாநகராட்சிக்குட்பட்ட பகுதியை சேர்ந்தவர் 4 வயது சிறுமி. நேற்று முன்தினம் இவரது தாயார் டி.என்.பி.எஸ்சி. தேர்வுக்காக வீட்டில் படித்து கொண்டிருந்தார். சிறுமியின் தந்தை மது போதையில் இருந்திருக்கிறார். அவர் சிறுமியை அழைத்துகொண்டு அருகில் உள்ள பூங்காவுக்கு சென்றுள்ளார்.
அப்போது பூங்காவில் சிறுமியை விளையாட விட்டு விட்டு சிறுமியின் தந்தை அங்கேயே தூங்கி விட்டார். இதை கவனித்துக் கொண்டிருந்த மர்மநபர் ஒருவர் அந்த சிறுமியிடம் பாலியல் தொல்லை கொடுத்து விட்டு தப்பிச்சென்றுள்ளார்.
இதையடுத்து சிறுமியின் அழு குரலைக் கேட்டு அங்கு வந்த பெற்றோர், சிறுமியின் நிலை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனே சிறுமிக்கு காஞ்சீபுரம் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளித்து செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
இது குறித்து தகவல் கிடைத்ததும் காஞ்சீபுரம் மாவட்ட அனைத்து மகளிர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்தபோது அதே பகுதியைச் சேர்ந்த 11 ஆம் வகுப்பு மாணவர் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந்தது. மாணவரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.