#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
சாந்தி டீச்சர் தற்கொலை வழக்கில் கைதான கல்லூரி பேராசிரியர்! தற்கொலைக்கு இதுதான் காரணமா!
திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு தாலுகா, கரலம்பாக்கத்தைச் சேர்ந்தவர் அரிசாந்தி(வயது 32). இவர் சென்னை அரும்பாக்கத்தில் உள்ள டி.ஜி.வைஷ்ணவா கல்லூரியில் 5 ஆண்டுகளுக்கு முன்பு தெலுங்கு உதவி பேராசிரியையாக பணிபுரிந்து வந்துள்ளார்.அதன்பிறகு அரசு பள்ளியில் ஆசிரியை வேலை கிடைத்ததால் பேராசிரியை வேலையை விடுத்து பெரம்பூரில் உள்ள அரசு பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வந்துள்ளார்.
இந்நிலையில் தான் வேலை பார்த்து வந்த கல்லூரியில் நண்பர்களை பார்க்க வந்த சாந்தி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டது. மேலும் இச்சம்பவம் தொடர்பாக அதே கல்லூரியை சேர்ந்த நடராஜன் என்பவரிடம் போலீசார் விசாரனை மேற்கொண்டனர்.
அதில் நடராஜனும், அரிசாந்தியும் ஒரே பகுதியைச் சேர்ந்தவர்கள் என்றும் சிறுவயது முதலே பள்ளியில் ஒன்றாக படித்தவர்கள் என்றும் தெரியவந்துள்ளது. அரிசாந்தி கல்லூரியில் தெலுங்கு உதவி பேராசிரியராக பணிக்குச் சேர்ந்தபோது நடராஜனுடன் காதல் மலர்ந்தது. இருவரும் காதலித்து வந்துள்ளனர்.
ஆனால் கடந்த சில வருடங்களுக்கு முன்பு நடராஜனுக்கு வேறு ஒரு பெண்ணுடன் திருமணம் நடந்துள்ளது. தற்போது அவருக்கு 2 குழந்தைகள் உள்ளனர். ஆனால் அதன்பிறகும் இருவரும் காதலித்து வந்ததாக தெரிகிறது.
இந்த நிலையில் தன்னை 2-வதாக திருமணம் செய்து கொள்ளும்படி நடராஜனிடம் அரிசாந்தி கேட்டுள்ளார். ஆனால் அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால் மனம் உடைந்த அரிசாந்தி தான் வேலை பார்த்த கல்லூரி வகுப்பறையில் தற்கொலை செய்து கொள்ளப்போவதாக நடராஜனின் செல்போனுக்கு மெஸேஜ் அனுப்பிவிட்டு, தனது கை மணிக்கட்டை அறுத்து கொண்டும், பின்னர் துப்பட்டாவால் வகுப்பறையில் உள்ள மின்விசிறியில் தூக்குப்போட்டும் தற்கொலை செய்து கொண்டார்.
அதனை வைத்து போலீசார் நடராஜன் தான் அரிசாந்தியை தற்கொலைக்கு தூண்டியதாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.