திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
அதிர்ச்சி.. போரூர் ஏரியில் மிதந்த இளைஞரின் சடலம்..!
சென்னை போரூர் ஏரியில் வீராணம் குழாய்களுக்கு அருகே சடலம் ஒன்று மிதந்து கொண்டு இருந்துள்ளது. இதனை அவ்வழியில் செல்லும் பொது மக்களில் சிலர் பார்த்து போரூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
இதன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர் ஏரியில் மிதந்து கொண்டிருந்த சடலத்தை மீட்க தீயணைப்பு துறையினரின் உதவியை நாடியுள்ளனர். இதனையடுத்து அங்கு வந்த தீயணைப்பு வீரர்கள் ஏரியில் கிடந்த சடலத்தை கயிறு கட்டி மீட்டு கரை சேர்த்தனர்.
இதனை தொடர்ந்து, காவல் துறையினர் மீட்கப்பட்ட சடலத்தை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
இந்நிலையில் இறந்து சடலமாக கிடந்த நபர் 30 வயது மதிக்கத்தக்க ஆண் என்றும் உடல் அழுகிய நிலையில் இருப்பதால் அவர் ஏரியில் விழுந்து 2 நாட்கள் ஆகி இருக்கலாம் என்றும் சொல்லப்படுகிறது. மேலும் இறந்த நபர் யார்? அவர் எந்த பகுதியை சேர்ந்தவர்? தற்கொலையா? அல்லது தவறி விழுந்துள்ளாரா? என பல்வேறு கோணங்களில் தொடர்ந்து காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர்.