மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ஷாக்.. வீட்டில் கள்ளச்சாராயம் பதுக்கிய ஊராட்சி மன்ற தலைவர்.. அதிரடியாக கைது செய்த போலீஸ்.!
கடலூர் மாவட்டம் வேப்பூர் வட்டம் மங்களூர் ஒன்றியம் வடபாதி ஊராட்சி மன்ற தலைவராக இருப்பவர் கற்பகம். இவருக்கு திருமணமாகி மணிவேல் என்ற கணவன் உள்ளார். இந்நிலையில் ஊராட்சி மன்ற தலைவராக இருக்கும் கற்பகம் வீட்டில் கள்ளச்சாராயம் விற்க்கப்படுவதாக போலீசார்க்கு தகவல் கிடைத்துள்ளது.
அதன் அடிப்படையில் அங்கு விரைந்து சென்ற சிறுபாக்கம் காவல் உதவி ஆய்வாளர் ராஜாங்கம் மற்றும் சிறப்பு உதவி ஆய்வாளர் மணிமேகலை ஆகியோர் தலைமையிலான போலீசார் ஊராட்சி மன்ற தலைவர் கற்பகத்தின் வீட்டில் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
அப்போது விற்பனை செய்வதற்காக வீட்டில் பதுக்கி வைத்திருந்த சுமார் 4 லிட்டர் அளவு கொண்ட கள்ளச்சாராயத்தை போலீசார் கைப்பற்றினர். இதனையடுத்து ஊராட்சி மன்ற தலைவர் கற்பகத்தை கைது செய்த போலீசார் சிறையில் அடைத்துள்ளனர்.
மேலும் கற்பகத்தின் கணவர் மணிவேல் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கள்ளச்சாராய வழக்கில் விருதாச்சல போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.