ஐயோ பாவம்.. பரிதாப நிலையில் கீர்த்தி சுரேஷ்..'அந்த' வீடியோவை பார்த்து உருகிப்போன ரசிகர்கள்.!
புதுக்கோட்டையில் அதிர்ச்சி சம்பவம்.. குடிநீர் டேங்கில் கலக்கப்பட்ட மனித மலம்.. வாந்தி, மயக்கத்தில் மக்கள்..!
புதுக்கோட்டை மாவட்டம் வேங்கை வாசல் பகுதியில் இறையூர் வேங்கை வாசல் என்ற கிராமத்தில் பட்டியல் இன மக்கள் வாழ்ந்து வருகின்றனர். அவர்கள் பயன்படுத்தும் வகையில் அவூரில் குடிநீர் டேங்க் கட்டப்பட்டு பயன்பாட்டில் இருந்து வந்துள்ளது.
இந்நிலையில் கடந்த சில நாட்களாகவே அந்த டேங்க் தண்ணீரை குடித்த மக்கள் சிலருக்கு வாந்தி, மயக்கம், பேதி போன்றவை ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து குடிநீரில் ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டு இருக்கலாம் என மருத்துவர்கள் கூறியிருக்கின்றனர். இதனால் அந்த குடிநீர் டேங்க்கை திறந்து பார்த்தபோது அதில் மனித மலம் கலக்கப்பட்டிருந்த சம்பவம் அம்மக்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இதனைத்தொடர்ந்து அந்த டேங்கில் உள்ள குடிநீர் முழுவதும் உடனடியாக வெளியேற்றப்பட்டு டேங்க் சுத்தம் செய்யப்பட்டது. மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் டேங்கில் மலம் கலந்த மர்ம நபர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.