மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அதிர்ச்சி சம்பவம்.. அரசு பள்ளியில் மயங்கி விழுந்த பிளஸ் 1 மாணவர்..சக மாணவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி..!
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்காபுரம் வட்டம் சேஷசமுத்திரத்தில் வசித்து வருபவர் வேல்முருகன். இவரது மகன் செந்தில்நாதன் செல்லம்பட்டு கிராமத்தில் உள்ள அவரது பாட்டி வீட்டில் தங்கி 0அங்குள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்துள்ளார்.
இந்நிலையில் சம்பவத்தன்று மாணவன் செந்தில்நாதன் வழக்கம் போல் காலை பள்ளிக்கு புறப்பட்டுள்ளார். பின் பள்ளியை சென்றடைந்த மாணவன் காலை இறைவணக்க கூட்டத்தில் பங்கேற்றுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக செந்தில்நாதன் திடீரென மயங்கி கீழே விழுந்துள்ளார்.
இதனை பார்த்த சக மாணவர்கள் அதிர்ச்சி அடைந்து ஆசிரியர்களிடம் தெரிவித்துள்ளனர். அப்போது ஆசிரியர்கள் மாணவனை எழுப்ப முயற்சி செய்துள்ளார்கள் ஆனால் செந்தில்நாதன் மயக்க நிலையிலே இருந்துள்ளார். இதனால் ஆசிரியர்கள் மாணவன் செந்தில்நாதனை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சங்கராபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதனையடுத்து மருத்துவமனையில் செந்தில்நாதனை பரிசோதித்த மருத்துவர்கள் மாணவன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இதனை தொடர்ந்து அங்கு விரைந்து வந்த சங்கராபுரம் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
இதில் மாணவன் ஏற்கனவே வலிப்பு நோய்க்கு மருத்துவம் பார்த்து மருந்துகள் சாப்பிட்டு வந்துள்ளார் என்பது தெரிய வந்துள்ளது. மேலும் மாணவனின் இறபிர்கான காரணத்தை கண்டறிய செந்தில்நாதனின் உடலை காவல் துறையினர் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில் பிளஸ் 1 மாணவர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.