மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அதிர்ச்சி சம்பவம்.. புடவையில் தீப்பற்றி பெண் பலி.!
கள்ளக்குறிச்சி அடுத்த மலைக்கோட்டாலம் கிராமத்தில் சுப்பிரமணியன் - லட்சுமி தம்பதியினர் வசித்து வந்துள்ளனர்.
இந்நிலையில் சம்பவத்தன்று லட்சுமி வீட்டில் சமைத்து கொண்டிருந்தபோது திடீரென வலிப்பு ஏற்பட்டு கீழே விழுந்துள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக லட்சுமியின் சேலையில் தீப்பற்றியதில் அவர் பலத்த காயமடைந்துள்ளார். இதை பார்த்த அவரது கணவர் அதிர்ச்சியடைந்து உடனடியாக லட்சுமியை மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் லட்சுமி அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதனையடுத்து வரஞ்சரம் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.