மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
விழிப்புணர்வு முகாம் மூலம் வெளியான அதிர்ச்சி தகவல்!,, 8 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த வாலிபர் அதிரடி கைது..!
கோயம்புத்தூர் மாவட்டம், மேட்டுப்பாளையம் அருகே உள்ள பெள்ளாதி பகுதியைச் சேர்ந்தவர் 10 வயது சிறுமி. இவர் அப்பகுதியில் உள்ள ஒரு அரசு பள்ளியில் 5 ஆம் வகுப்பு படித்து வருகிறார். இவர் படித்து வரும் பள்ளியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. அப்போது எழுந்து நின்ற அந்த சிறுமி, அவரது பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுவன் ஒருவர் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக ஆசிரியர்களிடம் தெரிவித்துள்ளார்.
கடந்த 2020 ஆம் ஆண்டு கொரோனா ஊரடங்கு காலத்தில் தனது பெற்றோர் இல்லாத நேரத்தில் வீட்டுக்கு வந்த அந்த நபர், பாலியல் தொல்லை அளித்ததாக கூறினார். இதனையடுத்து, மேலும் 7 மாணவிகள் எழுந்து தங்களுக்கும் அந்த வாலிபர் பாலியல் தொல்லை அளித்ததாக கூறி அதிர்ச்சியளித்தனர். அதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த ஆசிரியர்கள். இதுபற்றி காரமடை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
புகாரின் அடிப்படையில் அந்த வாலிபர் மீது போக்சோ பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், அவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வாலிபர் ஒருவர் 8 மாணவிகளுக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.