திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
பேருந்தில் இருந்து இறங்கிய முதியவர் படுகொலை... மர்ம நபருக்கு போலீஸ் வலைவீச்சு.!
திருநெல்வேலி வண்ணாரப்பேட்டை பேருந்து நிறுத்தத்தில் இறங்கிய முதியவரை மர்ம நபர் ஒருவர் கழுத்தை நெரித்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக பாளையங்கோட்டை காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து கொலையாளியை தேடி வருகின்றனர்.
நெல்லை வண்ணாரப்பேட்டையில் மதுரை சங்கரன்கோவில் மற்றும் ராஜபாளையம் மார்க்கமாக வந்து செல்லும் பேருந்துகள் நிறுத்துவதற்கு பேருந்து நிறுத்தம் ஒன்று இருக்கிறது. இந்தப் பேருந்து நிறுத்தம் அருகே முதியவர் ஒருவர் ரத்த காயங்களுடன் இறந்து கிடப்பதாக பாளையங்கோட்டை காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்தை பார்வையிட்ட காவல் துறையினர் இறந்த முதியவரின் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் அவரது உடலை ஆய்வு செய்தபோது முகம் மற்றும் பற்களில் காயங்கள் இருப்பதை கண்டறிந்தனர்.
இதனைத் தொடர்ந்து சந்தேகமடைந்த காவல்துறையினர் அந்த பகுதிகளில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது தச்சநல்லூர் பேருந்தில் இருந்து இறங்கிய முதியவரை மர்ம நபர் ஒருவர் கழுத்தில் கை போட்டு இழுத்துச் சென்று இரண்டு வாகனங்களுக்கு மத்தியில் வைத்து அவரை அடித்து கழுத்தை நெரித்து கொலை செய்யும் காட்சிகள் பதிவாகியிருந்தது. இதனைத் தொடர்ந்து கொலை வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் அந்த மர்ம நபர் யார் அவருக்கும் இந்த முதியவருக்கும் என்ன சம்பந்தம் ஏன் அந்த முதியவரை கொலை செய்தார் என்ற கோணத்தில் விசாரணையை முடுக்கி விட்டு இருக்கின்றனர்.