மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அதிர்ச்சி.. கல்லூரி மாணவியை கத்தியால் குத்திய பள்ளி மாணவன்.. இதுதான் காரணமா.?
திருப்பத்தூர் மாவட்டம் பரதேசிப்பட்டி கிராமத்தில் வசித்து வருபவர் மனோகரன். இவர் மளிகைக்கடை ஒன்று வைத்து நடத்தி வருகிறார். இவருக்கு மோனிஷா என்ற மகள் ஒருவர் உள்ளார். இவர் ஊத்தங்கரையில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார்.
இந்நிலையில் சம்பவத்தன்று வழக்கம்போல் கல்லூரிக்கு சென்று விட்டு மாலை மோனிஷா வீடு திரும்பியுள்ளார். அப்போது அவர் வீட்டில் தனியாக இருப்பதை அறிந்த சிறுவன் ஒருவன் அவரை சரமாரியாக குத்தியுள்ளார். மேலும் தடுக்க வந்த அவரது பாட்டியையும் குத்திவிட்டு அங்கிருந்து அந்த சிறுவன் தப்பி சென்றுள்ளார்.
இதனையடுத்து இவர்களது அலரல் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அவர்கள் இருவரையும் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.
இந்நிலையில் போலீசார் நடத்திய விசாரணையில் மோனிஷாவை கத்தியால் குத்தியது அவரது உறவுக்காரரான ஒன்பதாம் வகுப்பு படிக்கும் சிறுவன் ஆவார். இந்த சிறுவன் மோனிஷாவின் வீட்டில் உள்ள செல்போனை யாருக்கும் தெரியாமல் திருடி செல்ல முயற்சி செய்துள்ளார். இதனை பார்த்த மோனிஷா சிறுவனை கடுமையாக திட்டியதோடு அவரது பெற்றோரிடமும் இது பற்றி கூறியுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த அந்த சிறுவன் மோனிஷாவை பழிவாங்க எண்ணி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மோனிஷாவை கத்தியால் குத்தியது தெரியவந்துள்ளது. மேலும் கல்லூரி மாணவியை பழிவாங்கும் நோக்கத்தில் சிறுவன் கத்தியால் குத்திய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.