திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
அதிர்ச்சி.. மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த உடற்கல்வி ஆசிரியர்.. போக்சோவில் தூக்கிய போலீஸ்..!
வியாசர்பாடியை சேர்ந்த மாணவி ஒருவர் அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 9ம் வகுப்பு பயின்று வந்துள்ளார். இந்நிலையில் மாணவி கடந்த சில தினங்களுக்கு முன்பு அளவுக்கு அதிகமான மாத்திரைகளை உட்க்கொண்டு மயங்கி விழுந்துள்ளார். இதனை கண்ட அதிர்ச்சியடைந்த மாணவியின் பெற்றோர் உடனடியாக மாணவியை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.
இதனைதொடர்ந்து மருத்துவமனையில் மாணவிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மாணவியின் பெற்றோர் அவரிடம் ஏன் இவ்வாறு செய்தாய் என்று விசாரித்துள்ளனர். அப்போது மாணவி தான் படிக்கும் அதே பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக பணிபுரியும் ஆல்பின் பிரேம்குமார் அடிக்கடி பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறியுள்ளார்.
இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த மாணவியின் பெற்றோர் உடனடியாக எம்கேபி நகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதன்பேரில் உடற்கல்வி ஆசிரியர் ஆல்பின் பிரேம்குமாரை கைது செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.