திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
வேலைக்கு சென்ற 17 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை.. போலீசார் அதிரடி நடவடிக்கை!
திருவாரூர் அருகே வேலைக்கு சென்ற 17 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த டிராவல்ஸ் உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த 17 வயதான சிறுமி ஒருவர் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள முத்துப்பேட்டை அடுத்த ஜாம்புவானோடை சிவராமன் காலனி பகுதியில் உள்ள உறவினர் வீட்டில் இருந்தபடி டிராவல்ஸ் கடையில் கடந்த 18 ஆம் தேதி முதல் வேலைக்கு சேர்ந்துள்ளார்.
இந்த நிலையில் வேலைக்கு சேர்ந்து இரண்டாவது நாள் நேற்று முன்தினம் மாலை உரிமையாளரின் மற்றொரு கடையான செல் கடைக்கு சென்று உரிமையாளர் தாஜுதீன் என்பவரிடம் பாத்ரூம் சாவி வாங்க சென்றுள்ளார். அப்போது உரிமையாளர் கடையின் கதவை பூட்டிவிட்டு சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார்.
இதனையடுத்து உடனடியாக சிறுமி முத்துப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார் தாஜுதீனை கைது செய்தனர்.