மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பெற்றோரை இந்தியில் பேச சொல்லி வற்புறுத்திய மதுரை விமான நிலைய சிஐஎஸ்எப் வீரர்கள்: நடிகர் சித்தார்த் காட்டம்..!
மதுரை விமான நிலையத்தில், தனது பெற்றோரை இந்தியில் பேசச் சொல்லி நீண்ட நேரம் காத்திருக்க வைத்ததாக பிரபல முன்னணி நடிகர் சித்தார்த் குற்றம் சாட்டியுள்ளார்.
பிரபல முன்னணி நடிகரான சித்தார்த், மதுரை விமான நிலையத்தில் அதிகாரிகள், அவரது பெற்றோரை இந்தியில் பேசச் சொல்லி நீண்ட நேரம் காத்திருக்க வைத்ததாக குற்றம் சாட்டியுள்ளார். இது பற்றி சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் நடிகர் சித்தார்த்.
மதுரை விமான நிலையம் வந்த வயதான சித்தார்த்தின் பெற்றோரின் உடைமையை சி.ஐ.எஸ்.எப் வீரர்கள், சோதனை செய்ததாகவும், அப்போது அவரது பெற்றோர் ஆங்கிலத்தில் பேச முயன்றபோது, தங்களிடம் இந்தியில் தான் பேச வேண்டும் என்று அவர்கள் வற்புறுத்தியதாக கூறினார்.
மதுரை விமான நிலையத்தில் கூட்டம் இல்லாத நிலையில், தேவையே இல்லாமல் இருபது நிமிடங்கள் வரை தனது பெற்றோரை இந்தியில் பேச சொல்லி காத்திருக்க வைத்ததாக சித்தார்த் குற்றம் சாட்டியுள்ளார்.