மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ஜாதி பிரச்சனையில் அம்மனை டீலில் விட்ட பக்தகோடிகள்.. இருதரப்பு மோதலால் களமிறங்கிய காவல்துறை..!
அம்மனுக்கு கரகம் எடுக்கும் விஷயத்தில் இருதரப்பு மோதல் ஏற்பட்டுள்ளது.
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அருணகிரிபட்டினத்தில் முத்து மாரியம்மன் கோவில் உள்ளது. இங்கு ஆடி திருவிழாவின்போது முக்கிய நிகழ்வான கரகம் எடுப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் இரு சமூகத்தினர் இடையே சீட்டு குலுக்கி போட்டு யார் பெயர் வருகிறதோ அந்த சமூக மக்கள் கரகம் எடுப்பது வழக்கம். இந்நிலையில், ஒரு தரப்பினர் நீதிமன்றத்தை நாடி தங்களுக்கு சாதகமான தீர்ப்பை பெற்றுள்ளனர்.
இதனால் மற்றொரு தரப்பினர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து தங்களுக்கு சாதகமான உத்தரவை பெற்றதாக தெரியவருகிறது. கரகம் எடுக்கும் நிகழ்வின் போது இருதரப்பு சமூக மக்களும் கரகத்தை தூக்க வந்து மோதலில் ஈடுபட்டுள்ளனர்.
இதனையடுத்து, பாதுகாப்பு கருதி கூடுதல் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ள நிலையில், இருதரப்பை சார்ந்தவர்களும் கோவிலில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். மேலும், அவர்களிடம் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.