மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
12-ம் வகுப்பு மாணவன், 10-ம் வகுப்பு மாணவி ஜோடியாக தற்கொலை முயற்சி.. பள்ளி வளாகத்தில் பகீர் செயல்.!
அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு மாணவி தற்கொலை முயற்சி செய்து கொள்ள, தனியார் பள்ளியில் பயின்று வந்த பன்னிரண்டாம் வகுப்பு மாணவனும் விஷம் குடித்து மயங்கி விழுந்த சம்பவம் நடந்துள்ளது.
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வரும் மாணவி ஒருவர், கடந்த செவ்வாய்க்கிழமை காலை 9 மணி அளவில் பள்ளியின் கழிவறைக்கு சென்று இரண்டு கைகளின் நரம்பையும் பிளேடால் அறுத்துக் கொண்டுள்ளார்.
இதனைக்கண்ட மாணவிகள் பள்ளி நிர்வாகத்திடம் தெரிவித்து விடுவதாக கூறிய நிலையில், அங்கிருந்து மாடிக்கு சென்ற மாணவி இரண்டாவது தளத்திலிருந்து கீழே குதித்து தற்கொலை முயற்சி செய்தார். மாணவியை மீட்ட பள்ளி நிர்வாகத்தினர் திருப்புவனம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர்.
இதற்குள்ளாக, இந்த பள்ளிக்கு அருகே செயல்பட்டு வரும் தனியார் பள்ளியில் பயின்று வரும் 12 ஆம் வகுப்பு மாணவன் பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து தற்கொலைக்கு முயற்சித்துள்ளதாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் மாணவனை சிகிச்சைக்காக அதே திருபுவனம் அரசு மருத்துவமனையில் அனுமதி செய்துள்ளனர். விசாரணையில், இருவரும் ஒரே கிராமத்தை சார்ந்தவர்கள் என்பதும், ஒரே இடத்தில் டியூசன் சென்ற போது ஒன்றரை வருடமாக பழக்கம் ஏற்பட்டு காதலித்து வந்ததும் தெரியவந்துள்ளது.
இந்த விஷயம் இருவரின் பெற்றோருக்கும் தெரியவரவே, இருவரும் தங்களது பிள்ளைகளை கண்டித்து படிப்பு வயதில் காதல் தேவையற்றது என்று அறிவுரை கூறியுள்ளனர். மேலும், டியூஷனில் இருந்து நிறுத்தப்போவதாகவும் தெரிவித்துள்ளனர். இதனால் தாங்கள் சந்திக்க இயலாது என்று அஞ்சிய காதல் ஜோடி விபரீத முடிவை எடுத்து தெரியவந்ததது. இருவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.