மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
இதுவேறலெவல்.. திருமணத்தில் ஆதார் கார்டுக்கு சரக்கு விநியோகம்.. சீர்கெட்ட இளைஞர்களின் சரக்கு சப்ளை.!
இன்றளவில் திருமணங்களை வெகு விமர்சையாக நடத்துவது தொடர்கதையாகியுள்ளது. இளைஞர்கள் பிறரை ஆவலுடன் திரும்பி பார்க்க வைக்க வேண்டும் என்ற பெயரில் விதவிதமாக தயார் செய்து பதிவிடும் போஸ்டர்களுக்கு பஞ்சமே இல்லை.
இந்த நிலையில், சிவகங்கையில் நடைபெற்ற திருமணத்தில் கலந்துகொள்வோர்களுக்கு மதுபானம் வழங்கிய கேடுகெட்ட செயல் நடந்துள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கீழக்கண்டனி கிராமத்தை சேர்ந்த வாலிபருக்கு திருமணம் நடைபெற்றது.
திருமண போஸ்டரில், திருமணத்திற்கு வருவோர் ஆதார் கார்டுடன் வந்தால் மதுபானம் மற்றும் சிக்கன் போன்றவை வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டு இருந்தது. அதனைப்போல, திருமண நாளில் அவை விநியோகமும் செய்யப்பட்டது.
அதாவது, திருமணம் ஆனவர்களுக்கு 1 மதுபான பாட்டில் எனவும், திருமணம் ஆகாதவர்களுக்கு 2 மதுபான பாட்டில் எனவும் மணமகனின் நண்பர்கள் வழங்கியுள்ளனர். திருமணம் என்பது பலரின் வாழ்த்துக்களை பெற்று, இருஜோடி கைகோர்க்க நடக்கும் சுபநிகழ்ச்சி.
கலாச்சாரம், என்னிடம் பணம் உள்ளது என்ற ஆணவத்தில் குடும்பத்தை நாசமாக்கும் மதுபானத்தை வல்லல்போல வாரி வழங்கியதும், அதனை வாங்கி குடிக்க ஆதார்கார்டை தூக்கி வந்து நீட்டியதும் தான் கேவலத்தை உச்சம்.