மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
தந்தை கண்முன் துள்ளதுடிக்க உயிரிழந்த மகள்; சரக்கு வாகனம் ஏறி-இறங்கியதில் சோகம்.!
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சிவகாசி, சிவகாமிபுரம் காலனியில் வசித்து வருபவர் செல்வம். இவரின் மனைவி ஜோதி (வயது 37). நேற்றுமுன்தினம் ஜோதி தனது தந்தை நகராஜுடன், சிவகாசி - திருத்தங்கள் சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டு இருந்தார்.
அச்சமயம், இவர்களின் இருசக்கர வாகனத்திற்கு பின்னால் வந்த சரக்கு வாகனம் இவர்களின் மீது மோதியுள்ளது. இவ்விபத்தில், தந்தை - மகள் இருவரும் சாலையில் தவறி விழுந்து காயமடைந்தனர். மேலும், சரக்கு வாகனம் ஜோதியின் மீது ஏறி இறங்கி நின்றது.
படுகாயத்துடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஜோதி, சில நிமிடங்களில் பரிதாபமாக உயிரிழந்தார். அவரின் தந்தை காயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விஷயம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள சிவகாசி கிழக்கு நகர காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சரக்கு வாகன ஓட்டுநர் முருகன் என்பவரும் கைது செய்யப்பட்டார்.