"திருமணத்திற்கு பின் இப்படி ஆகிடுச்சு".. வேதனை தெரிவித்த ஜோதிகா.!
சிவானந்தா குருகுலத்தின் பொதுச்செயலாளர் காலமானார்!

சிவானந்தா குருகுலத்தின் பொதுச் செயலாளர் ராஜாராம்உடல் நலக்குறைவால் காலமானார்.
1974ஆம் ஆண்டு முதல் சிவானந்தா குருகுலத்தின் பொதுச்செயலாளராக பொறுப்பு வகித்தவர் ராஜாராம். 67வயது நிரம்பிய சிவானந்தா ராஜாராம் உடல்நலக்குறைவால் சென்னையில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்தநிலையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
காட்டாங்குளத்தூரிலுள்ள சிவானந்தா குருகுலத்தில் ராஜாராமின் உடல் அஞ்சலிக்காக தற்போது வைக்கப்பட்டுள்ளது. சிவானந்த குருகுலத்தின் பொதுச்செயலாளராக இருந்த ராஜாராமின் சேவையைப் பாராட்டி பத்மஸ்ரீ விருது அளிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.