திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
2026ல் தமிழக முதலமைச்சராக பதவியேற்பேன் - சமக தலைவர் சரத்குமார்.!
வரும் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் எங்கள் கட்சி வெற்றி பெற்று நான் தமிழக முதல்வராக பதவி ஏற்பேன் என்று அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் தெரிவித்துள்ளார்.
பிரபல நடிகரும், அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் பொதுச் செயலாளராக இருப்பவர் சரத்குமார். இன்று திருநெல்வேலியில் நடந்த சமத்துவ மக்கள் கட்சியின் பொறுப்பாளர்கள் கூடத்தில் கலந்துகொண்டு அவர் சிறப்புரையாற்றினார்.
அப்போது பேசிய அவர், வரும் 2026 ஆம் ஆண்டு நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளிலும் போட்டியிட்டு வெற்றி பெறுவோம் எனவும் எங்களைப் பற்றி அப்போது மற்ற கட்சிகளுக்கு தெரிய வரும் எனவும் கூறியுள்ளார்.
மேலும் 2026 சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற சமத்துவ மக்கள் கட்சி ஆட்சி பொறுப்பை ஏற்கும், நான் முதலமைச்சராக பதவி ஏற்பேன் எனவும் கூறியுள்ளார்.
ஆனால், அதே நேரத்தில் வரும் 2024 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தல் நமது இலக்கு இல்லை என்றாலும், ஏதாவது ஒரு தொகுதியில் போட்டியிட்டு அனைவரும் அங்கு வந்து உழைத்து நமது வேட்பாளரை வெற்றி பெற வைப்போம் என கூறியுள்ளார்.