மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அரசுப்பள்ளி கழிவறையில் பாம்பு கடித்து, மாணவி மருத்துவமனையில் அனுமதி..!!
தமிழகத்தின் வேலூர் மாவட்டத்தில் உள்ள குடியாத்தம் அருகே ஆலாம்பட்டரை என்னும் கிராமம் உள்ளது. அந்த கிராமத்தில் வசித்து வருபவர் தான் சிவஞானம். இவருக்கு பூவிகா என்னும் 13 வயது மகள் இருக்கிறார். இவர் ஒலக்காசி கிராமத்தில் இயங்கிவரும் அரசு உயர்நிலைப் பள்ளி ஒன்றில் 7-ம் வகுப்பு பயின்று வந்துள்ளார். இந்த நிலையில் இன்று காலை வழக்கம் போல் பள்ளிக்கு சென்ற மாணவி பூவிகா பள்ளி வளாகத்தில் இருக்கும் கழிவறைக்கு சென்றுள்ளார்.
அப்போது அங்கே பாம்பு ஒன்று பதுங்கி இருந்துள்ளது. இதை அறியாமல் பூவிகா பாம்பு அருகே சென்று விட்டார். இதனால் திடீரென்று அந்த பாம்பு மாணவியை கடித்துள்ளது. இதனால் பயத்திலும், வலியிலும், அலறி கூச்சலிட்டார். அதன்பின் அங்கு சென்ற ஆசிரியர்கள் மாணவியை மீட்டு குடியாத்தம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு தொடர்ந்து மாணவிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவத்தினால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர்கள், அரசு பள்ளியில் பாம்பு வரும் அளவிற்கு புதர் இருந்ததா அல்லது வெளியே இருந்து பாம்பு வந்ததா என்று கேள்வி எழுப்பி உள்ளனர்.