மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
லிப் லாக்கில் பீடி புகையை பரிமாறும் பள்ளி மாணவிகள்.. அடுத்தடுத்து அதிர்ச்சி வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரல்.!
கடந்த சில நாட்களுக்கு முன்னதாக செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் செல்லும் அரசு பேருந்தில் மாணவிகள் மதுபானம் அருந்தும் பேரதிர்ச்சி வீடியோ வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இந்த தாக்கம் குறைவதற்குள் அடுத்தடுத்து பல விடியோக்கள் வெளியாகி பதைபதைப்பை அதிகரித்துள்ளது.
சமூக வலைத்தளத்தில் வெவ்வேறு இடங்களில் எடுக்கப்பட்ட 2 விடியோக்கள் இணையத்தில் பரவி வருகின்றது. ஒரு வீடியோவில் மாணவிகள் கூட்டாக சேர்ந்து மதுபானம் அருந்தும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. மற்றொரு வீடியோவில், மாணவிகள் பீடி துண்டை பற்றவைத்து அதனை குடித்து வருகின்றனர். இரண்டு மாணவிகள் அதனை வாயோடு வாய் வைத்து முத்தம் கொடுப்பது போல புகையை பரிமாறிக்கொள்கின்றனர்.
இன்னொரு வீடியோ காட்சியில், மாணவிகள் கூட்டாக சேர்ந்து தரையில் அமர்ந்திருக்கும் நிலையில், ஒரு மாணவி மற்றொரு மாணவியை கட்டியணைத்து முத்தமிடுகிறார். மேலும், அதனை புகைப்படமாக பதிவு செய்ய வேண்டாம், வீடியோ எடு என்று தனது தோழியிடம் கூறியவாறு, அந்தரங்க நேரத்தில் எழுப்பப்படும் ஒலியை பின்னணியில் எழுப்பி சில்மிஷம் செய்கிறார். இந்த பேரதிர்ச்சி காணொளிகள் இணையத்தில் வைரலாகின்றன.
எதிர்கால தூண்களாக இருக்கும் இளம் சமுதாயம் வெவ்வேறு வழிகளில் சீரழிவதை விடியோவாக பதிவு செய்து வெளியிடுவதை வாடிக்கையாக வைத்துள்ளது அவர்களின் எதிர்காலத்தையும், உடல் நலனையும் கேள்விக்குறியாக்கியுள்ளது என சமூக ஆர்வலர்கள் சுட்டிக்காண்பிக்கின்றனர்.
"புகை மற்றும் மதுப்பழக்கம் உடலுக்கு எமன், உயிரை குடிக்கும், புற்றுநோயை ஏற்படுத்தி வாழ்க்கையை சீரழிக்கும்".